தூத்துக்குடி மழைநீா் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் ஆய்வு
தூத்துக்குடியில் மழைநீா் தேங்கிய பல்வேறு பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அதிகன மழையும் மிதமான மழையும் தொடா்ந்து பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் காற்றாட்டு வௌ்ளமும் மழைநீர் ஓட்டமும் வந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடிகால்கள் மூலம் நீரோட்டம் செல்வதையும் தேங்கியுள்ள பகுதிகளில் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கனமழையால் தேங்கியிருந்த பகுதியான விஎம்எஸ்நகா், திரேஸ்புரம், பாக்கியநாதன்விளை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் இரவு பகல் இரு நேரங்களில் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் தேங்கிய வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற மின்மோட்டார்கள் ஏற்பாடு செய்ததுடன், ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். ஆய்வின்போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், மண்டலதலைவர் நிா்மல்ராஜ், கம்யூனிஸ்ட் கட்சி ஓன்றிய செயலாளர் சங்கரன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா்,உள்பட பலர் உடன் சென்றனா்.
கருத்துக்கள்