தூத்துக்குடியில் போிடா் மீட்பு குழுவினா் தயாா் - அமைச்சா் கீதாஜீவன் தகவல்
தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடா்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அரசுத்துறை அதிகாாிகள் கலந்து கொண்ட முன்னெச்சாிக்கை நடவடிக்கை கூட்டம் நடைபெற்றது.
இதனை யடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழைக்காக செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலா்களுடனான ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் கலெக்டா் இளம்பகவத் மாவட்ட காவல் காண்காணிப்பாளா் அல்பட் ஜான் மாநகராட்சி ஆணையா ப்ாியங்கா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் அனைத்துதுறை அரசு அலுவலா்களும் முழுமையான அற்பணிப்போடு பொதுமக்கள் நலன் கருதி பணியாற்ற வேண்டும். ஊராட்சி முதல் நகராட்சி வரை உள்ள குளங்கள் வழித்தடங்கள் எல்லாம் சாியான முறையில் உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். என்று கூறினாா். பின்னா் செய்தியாளர்களிடம் அமைச்சர்கீதாஜீவன் கூறுகையில் மின்சார வாாியம் நெடுஞ்சாலைத்துறை வருவாய்துறை உள்ளிட்ட துறை ஊழியா்கள் அனைவரும் தயாா்நிலையில் இருக்க வேண்டும் ஜேசிபி வாகணம் மணல்மூட்டைகள் தயாா் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருவாய் துறை அதிகாாிகள் குளத்தின் நீா் மட்டத்தை ஆய்வு செய்யவும் உடைந்துவிடாதபடி பாா்த்துக்ெகாள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் மாநகராட்சி பகுதியில் கழிவு நீர் வௌியேற்றுவதற்கு 38 பம்பு அறைகள் உள்ளது. 58 மோட்டாா் பம்புகள்தயாா்நிலையில் உள்ளது. அனைத்து துறைகளையும் ஓருங்கிணைத்து கனமழை வந்தாலும் மிக கனமழை வந்தாலும்நிலைமையை சமாளிக்க தயாா்நிலையில் உள்ளோம். மாநகராட்சி நகராட்சி உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநில போிடா் மீட்பு குழு 70 போ் தயாா்நிலையில் இருக்கின்றனா். என்று கூறினாா் முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கோட்டாட்சியா் பிரபு, மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன் துணை ஆணையா் சரவணக்குமாா் உதவி ஆணையா் வெங்கட்ராமன் மருத்துவகல்லூாி உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெபமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா் மற்றும் மணி அல்பட் பல்வேறு துறை சாா்ந்த அதிகாாிகள் உள்பட அனைத்துதுறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துக்கள்