பட்டதாரிகளுக்கு ரயில்வேயில் வேலை; விண்ணப்பம் தொடக்கம்
ரயில்வேயில் வேலைக்கான காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் ஆவளுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்த தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் உள்ள பதவிகளுக்கான விண்ணப்பம் (அக்டோபர் 21) முதல் தொடங்கியது.
ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்க தயாரா நீங்கள்? டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர், ஜூனியர் அக்கோன்ஸ் அசிஸ்டண்ட், சினியர் கிளார்க், டிராப்பிக் அசிஸ்டண்ட் ஆகிய தொழில்நுட்ப அல்லாத பதவிகளுக்கான 2025-ம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 5,810 காலிப்பணியிடங்களுக்கு இன்று (அக்டோபர் 21) முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. பட்டதாரிகள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
ரயில்வே தொழில்நுட்ப அல்லாத பதவிகள் தேர்வு 2026 (RRB NTPC 2026 Graduates)
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள் சென்னை RRB
தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் (Ticket Supervisor) 161 6
ரயில் நிலைய மாஸ்டர் (Station Master) 615 6
சரக்கு ரயில் மேனேஜர் (Goods Train Manager) 3,416 3
இளநிலை கணக்கு உதவியாளர் தட்டச்சர் (Junior Accounts Assistant
Cum Typist) 921 108
மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சர் (Senior Clerk Cum Typist) 638 1
போக்குவரத்து உதவியாளர் (Traffic Assistant) 59 50
மொத்தம் 5,810 187
இதில் சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் கீழ் மட்டும் 187 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
by TaboolaSponsored Links
You May Like
War Thunder - Register now for free and play against over 75 Million real Players
Fight in over 2000 unique and authentic Vehicles. Fight on Land, on Water and in the Air. Join the most comprehensive vehicular combat game. Over 2000 tanks, ships and aircraft.
War Thunder
நீங்கள் விரும்பும் கட்டுரைகள்
தமிழகத்தில் இன்று அதி கனமழை… செங்கல்பட்டு டூ மயிலாடுதுறை- IMD கொடுத்த ரெட் அலர்ட்!
பள்ளி, கல்லூரிகள் இன்று (செப்டம்பர் 22) மழை விடுமுறை… மாவட்ட வாரியாக லிஸ்ட்!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் 'பைசன்' படத்துடைய வசூல்.. ஹீரோவாக ஜெயித்த துருவ் விக்ரம்
சூர்யாவின் 'கருப்பு' படம் எப்படி வந்துருக்கு.. ரிலீஸ் எப்போது.. ஆர்.ஜே. பாலாஜி கொடுத்த அப்டேட்
வயது வரம்பு
ரயில்வேயில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 33 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிமுறைகளின் எஸ்சி, எஸ்டி 5 வருடங்கள், ஒபிசி 3 வருடங்கள் தளர்வு வழங்கப்படுகிறது.
வயது வரம்பு 01.01.2026 தேதியின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதார்கள் 01.01.2008 தேதிக்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. பொதுப்பிரிவு 02.01.1993 தேதி முன்னரும், ஒபிசி 02.01.1990 தேதிக்கு முன்னரும், எஸ்சி, எஸ்டி 02.01.1988 தேதிக்கு முன்னரும் பிறந்தவராக இருக்கக்கூடாது.
கல்வித்தகுதி
இப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதி 20.11.2025 தேதியின்படி இருக்க வேண்டும்.
தொழில்நுட்பம் அல்லாத ரயில் பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இளநிலை கணக்கு உதவியாளர்
தட்டச்சர் மற்றும் மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சர் பதவிக்கு ஆங்கிலம்/ இந்தி ஆகிய மொழியில் கணினியில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
டிக்கெட் மேற்பார்வையாளர், ரயில் நிலைய மாஸ்டர் ஆகிய பதவிகளுக்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 ஆகும்.
சரக்கு ரயில் மேனேஜர், இளநிலை கணக்கு உதவியாளர், மூத்த எழுத்தர் ஆகிய பதவிகளுக்கு தொடக்க சம்பளம் ரூ.29,200 ஆகும்.
போக்குவரத்து உதவியாளர் பதவிக்கு தொடக்க சம்பளம் ரூ.25,500 ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை
ரயில்வேயில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு இரண்டு கட்ட கணினி வழி தேர்வு மற்றும் திறன் தேர்வு நடைபெறும். சரக்கு ரயில் மேனேஜர் மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் பதவிகளுக்கு மட்டும் திறன் தேர்வு கிடையாது.
முதல் கட்ட கணினி வழி தேர்வு பொது அறிவு, கணிதம், பொது நுண்ணறிவு என 100 கேள்விகள் கொண்டு 90 நிமிடம் நடைபெறும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இரண்டாம் கட்டத் தேர்வு அதே போன்று, பொது அறிவு, நுண்ணறிவு, கணிதம் என 120 கேள்விகளுடன் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் திறன் தேர்விற்கு தகுதிப் பெறுவார்கள். இறுதியாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதி உள்ள பட்டதாரிகள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் மற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ரூ.250 செலுத்த வேண்டும்.
முக்கிய நாட்கள்
விவரம் தேதிகள்
விண்ணப்பம் தொடக்கம் 21.10.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 20.11.2025
கட்டணம் செலுத்த கடைசி நாள் 22.11.2025
விண்ணபம் திருத்தம் செய்ய அவகாசம் 23.11.2025 - 02.12.2025
scribe விவரம் சமர்பிக்க அவகாசம் 03.12.2025 - 07.12.2025
ரயில்வே பணியை எதிர்பார்க்கும் பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பித்துப் பயன்பெறலாம். தேர்விற்கான பாடத்திட்டம், முறை ஆகியவை குறித்து அறிவிப்பில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
கருத்துக்கள்