பொதுமக்கள் குறைகளை உடனே தீர்த்து வைத்த அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் மக்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைத்த அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 9வது வார்டு பூபாலராயர்புரம் பத்ரகாளியம்மன் கோவில் 2வது தெருவில், கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததால் சிறிய மழை பெய்தாலே மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து, பொதுமக்களை பெரும் சிரமத்திற்குள்ளாக்கியது.மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் குடியிருப்போர் தங்கள் வீடுகளில் துர்நாற்றத்தால் அவதிப்பட்டனர். இதுகுறித்து , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது . அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, மழைநீரை வெளியேற்றவும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யவும் உடனடி உத்தரவு பிறப்பித்தார்.அமைச்சரின் உத்தரவின் பேரில் பணிகள் நடைபெற்றன.பணிகள் நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகள் விரைவில் நிறைவு பெற அதிகாரிகளுக்கு நேர்முக அறிவுறுத்தல்களை வழங்கினார். அப்பகுதி மக்கள் தங்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்ததை வரவேற்று,"எங்களின் குரல் உடனே கேட்டுக் கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!"என்று தெரிவித்தனர்.
கருத்துக்கள்