advertisement

மாநகராட்சி - நகராட்சி கமிஷனர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு

அக். 22, 2025 6:38 முற்பகல் |

 

தமிழகத்தில் பருவ மழையுடன், புயல் மழையும் சேர்ந்து பெய்ய தொடங்கி உள்ளது. அதனால் பல இடங்களில் கடுமையான மழை கொட்டி தீர்க்கிறது. இந்த பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அதன்படி அனைத்து மாநகராட்சி-நகராட்சி கமிஷனர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். மரம் சாய்ந்ததாக தகவல் வந்தால் உடனடியாக மரத்தை அப்புறப்படுத்த வேண்டும். தேங்கி நிற்கும் மழைநீரை மிக துரிதமாக அப்புறப்படுத்த வேண்டும். ஏற்கனவே மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.

கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் குறித்து தகவல்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட வேண்டும். மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக தங்குமிடத்தை ஏற்படுத்தி தர வேண்டும். உணவுகள் வழங்க வேண்டும். மின்னல் வேகத்தில் நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும்.

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தெரிவிக்க நகராட்சி நிர்வாக அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். வானிலை மைய எச்சரிக்கைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement