தூத்துக்குடி மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள்
அக். 24, 2025 6:03 முற்பகல் |
தூத்துக்குடியில் மழை குறைந்ததின் காரணமாக 4 நாட்களுக்கு பின்னர் விசைப்படகு மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் இன்று சுழற்சி முறையில் சுமார் 109 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.





கருத்துக்கள்