advertisement

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை விதிப்பு

அக். 24, 2025 10:59 முற்பகல் |

 


மத்திய வங்க கடல் பகுதியில் புயல் உருவாக உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

24.10.2025 முதல் 27.10.2025 வரையிலான தேதிகளில், தமிழக கடலோர பகுதிகள் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார்வளைகுடர் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 25.10.2025 அன்று மத்திய வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் இன்று (24.10.2025) மாலைக்குள் கரை திரும்பிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement