வைரலாகும் அஜித்தின் டாட்டூ
அஜித் சமீபத்தில் பாலக்காட்டில் சாமி தரிசனம் செய்தார். தன் குடும்பத்துடன் தரிசனம் செய்த அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன.
அஜித். சமீபத்தில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாலக்காட்டில் இருக்கும் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றிருக்கின்றார். கேரளா பாலக்காட்டில் அமைந்திருக்கும் பகவதி அம்மன் கோவிலுக்கு தான் அஜித் சென்று தன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருக்கும் பெருவெம்பா என்ற ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் கோவில் தான் ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலுக்கு அஜித்தனது குடும்பத்துடன் அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்வாராம். அஜித்தின் தந்தையின் சொந்த ஊர் பாலக்காடு தான். ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் அவரின் குலதெய்வம் என்றும் ஒரு தகவல் உண்டு. இதைத்தொடர்ந்து இவர் பகவதி அம்மனின் உருவத்தை டாட்டூவாக பதிவிட்டிருக்கும் புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.





கருத்துக்கள்