advertisement

விவசாயி விரோத திமுக அரசு - நயினார் நாகேந்திரன்

அக். 25, 2025 10:11 முற்பகல் |

 

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-தஞ்சாவூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டேன். இந்திய வானிலை ஆய்வு மையமும், தமிழ்நாடு வானிலை ஆய்வு மையமும், தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக பலமுறை எச்சரித்திருந்தபோதும், நெல் கொள்முதலை துரிதப்படுத்தாமல், விவசாயிகளை அலட்சியம் செய்ததன் விளைவாக நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, எதற்கும் பயனின்றி அழுகி நாசமாகியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில், நன்கு விளைந்த நெல் மணிகள், மழை வெள்ளத்தில் சரிந்து, நீரில் மூழ்கி முளைக்கட்ட தொடங்கி இருக்கிறது. இதனால் வேதனை அடைந்திருக்கும் விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் கூறினேன். விவசாயிகள் தங்கள் குழந்தைகளைப் போல் பாதுகாப்பாக பராமரித்து, விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகள் வீணாகியுள்ளன. விவசாயி விரோத திமுக அரசின் உண்மையான முகம் இதுவே!இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement