நவ.5 ல் தூத்துக்குடி சிவன் கோவில் ஐப்பசி அன்னாபிஷேகம்
அக். 25, 2025 11:47 முற்பகல் |
பிரசித்தி பெற்றதூத்துக்குடி சிவன் கோவிலில் வருகிற நவ.5ஆம் தேதி (புதன்கிழமை) ஐப்பசி அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இந்த ஆண்டிற்கான ஐப்பசி அன்னாபிஷேகம் விழா வருகிற நவ.5ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு கும்ப பூஜை நடைபெறும். 10 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்.மாலை 5 மணி முதல் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்தப்பட்டு, அன்னத்தால் அலங்கரிக்கப்படும். மாலை 6 மணிக்கு பக்தர்களுக்கு அன்னாபிஷேக பிரசாதம் வழங்கப்படும். இரவு 8 மணிக்கு சந்தனம், விபூதி, பன்னீர் குடமுழுக்கு தீபாராதணை நடைபெறும். இந்நிகழ்வுக்கான விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.





கருத்துக்கள்