10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை நவ. 4-ல் வெளியீடு
அக். 25, 2025 9:43 முற்பகல் |
ற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதனை தெரிவித்தார். அன்பில் மகேஷ் தனது பேட்டியில் கூறியதாவது: நவம்பர் 4-ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
அந்தக் கூட்டத்தில் பொதுத்தேர்வு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.கூட்டத்தின் நிறைவில் அன்றைய தினமே 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும் என்று கூறினார்.





கருத்துக்கள்