advertisement

சென்னைக்கு 890 கி.மீ. தொலைவில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

அக். 25, 2025 4:58 பிற்பகல் |

 

(24-10-2025) ம் தேதி காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று மாலை 5:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது.

இது, நேற்று (25-10-2025) காலை 5:30 மணி அளவில், மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 8:30 மணி அளவில் அதே பகுதிகளில், போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே சுமார் 440 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 950 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 990 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் சென்னைக்கு 890 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிவரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது (26-10-2025) ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, 27ஆம் தேதி புயலாக மாறும் என்றும், 28ஆம் தேதி மாலை/இரவு நேரத்தில் காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திர கடற்கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement