பரமக்குடியில் சிறப்பு குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் - நகராட்சி ஆணையாளர் தகவல்
பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறப்பு கூட்டங்கள் நடைபெறுமென பரமக்குடி நகராட்சி ஆணையாளர் எம்.தாமரை தகவல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி ஆணையாளர் எம். தாமரை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி நகராட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திட, அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையிலான வார்டு அளவிலான சிறப்புக் கூட்டங்கள் 27.10.2025 - ம் தேதியில் 1 முதல் 36 வார்டுகளில் நடைபெற உள்ளது.
அது சமயம் , பொதுமக்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பொதுவான அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ள, பூங்காக்கள், நீர்நிலைகள் பராமரிப்புபணி, திடக்கழிவு மேலாண்மை பராமரிப்புபணி, நகராட்சி பள்ளிகளில் சுகாதாரம் , அடிப்படை வசதி மேம்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புனரமைத்தல் போன்ற அத்தியாவசிய பணிகள் தொடர்பான கோரிக்கைகளை வார்டு சிறப்பு கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவித்து தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு பரமக்குடி நகராட்சி ஆணையாளர் எம். தாமரை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்