கள்ளக்குறிச்சி : புதுமணப்பெண் எடுத்த விபரித முடிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மணியார்பாளையம் கீழாத்துக்குளி கிராமத்தை சேர்ந்த கலியனின் மகள் மோனேஸ்வரி (19), சில மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு மூன்று மாதங்கள் ஆகியவுடன், நவீன்குமாரின் தாயார் ராஜாம்பாள் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் மணமகன் குடும்பத்தார், மோனேஸ்வரியை குற்றம் சாட்டி அடிக்கடி தகராறு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மோனேஸ்வரி, தந்தை கலியனின் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு திரும்பி வந்தார். ஆனால் மனவேதனையில் இருந்து மீள முடியாமல், சம்பவத்தன்று ஈச்சங்காட்டில் உள்ள காட்டுக்கொட்டாயில் விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்தார்.அவரை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், மோனேஸ்வரியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.இந்த சம்பவம் குறித்து கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.





கருத்துக்கள்