வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
அக். 25, 2025 7:25 முற்பகல் |
வங்கக் கடலில் புயல் சின்னம் காரணமாக தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது கடலில், சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு- தென் கிழக்கில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அக். 27ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.





கருத்துக்கள்