advertisement

திருச்செந்தூர் கந்த சஷ்டி : ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம்

அக். 24, 2025 7:44 முற்பகல் |

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாக சாலை பூஜைகளுடன் நேற்று முன்தினம் (அக் 22 ம் தேதி) தொடங்கியது. தினமும் மூலவர் மற்றும் யாகசாலையில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. வாகன பவனியும் நடைபெறுகிறது.

விழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்கள், மேளவாத்தியங்களுடன், சண்முக விலாச மண்டபம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற உள்ளது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement