advertisement

தூத்துக்குடி -பிரஸ் கிளப் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அக். 24, 2025 5:04 முற்பகல் |

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு வழங்கும்  வீட்டு மனை உடனடியாக  வழங்க வலியுறுத்தி பிரஸ் கிளப் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.: முன்னாள் அமைச்சர், மேயர், உள்ளிட்ட பல்வேறு கட்சி முக்கிய பிரமுகர்கள்  பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டு மனை வழங்க வலியுறுத்தி பிரஸ் கிளப் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார். 

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் மூத்த உறுப்பினரும் சங்கத்தின் கௌரவ ஆலோசகருமான அருண், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநகர் மாவட்ட தலைவர் சக்தி முருகன், தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை, தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ்,  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணிச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், பாஜக பிரமுகர் ராஜவேல், வக்கீல்கள் சேகர், மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். 
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு தமிழக அரசின் சலுகை விலை வீட்டு மனை நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டு உள்ள நிலையில், தூத்துக்குடி சார்ந்த பத்திரிகை மற்றும் ஊடக துறையினருக்கு கடந்த 30 வருடத்திற்கு மேலாக தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கட்ட மனுக்களை முதலமைச்சர் முதல், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சாமிநாதன் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் கருப்பு உடை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் கலந்து கொண்டு சலுகை விலை வீட்டுமனை விரைந்து வழங்கிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில்: தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றி தர வேண்டும். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் செய்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை அதிமுக சார்பில் விரைவில் நடத்தப்படும் என்று பேசினார். 
இறந்த பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வரும் டிசம்பர் மாதத்திற்குள் மானிய விலையில் வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிக்கையாளர்களை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது வேதனைக்குறியது. மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்தால் மாவட்டம் முழுவதும் பத்திரிக்கையாளர்களை திரட்டி மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பிரஸ் கிளப் கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் லெட்சுமணன், மாரிராஜா, கண்ணன், முத்துராமன், இருதயராஜ், ராஜன், குமார், பிரஸ்கிளப் உறுப்பினர்கள் ரவி, மாரிமுத்து, முரளிகணேஷ், பாலகுமார், அகமதுஜான், அறிவழகன், நீதிராஜன், நடராஜன், கார்த்திகேயன், ஜெயராம், சூர்யா, ராமச்சந்திரன், செய்யது அலி சித்திக், கருப்பசாமி, சந்தனரமேஷ், அருள்ராஜ், மாணிக்கம், பிற சங்கத்தை சார்ந்த குமாரவேல், அண்ணாதுரை, முத்துமாரியப்பன், அல்போன்ஸ், சதீஸ்குமார், ஞானதிரவியம், ராஜேந்திரபூபதி, ரோஜா அருணன், செல்வின், கார்த்திக், சத்யா, சுடலைமணி, கனகராஜ், விஜயகாந்த், பாலசுப்பிரமணியன், மணிராஜ், இமானுவேல் குணசிங், உள்பட ஏராளமான பத்திரிக்கை மற்றும் ஊடக துறையினர் புகைப்பட கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பிரஸ் கிளப் பொருளாளர் ராஜு நன்றியுரையாற்றினார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement