திறந்தவெளியில் மதுஅருந்தும் குடிமகன்கள் பொதுமக்கள் அச்சம்
அக். 22, 2025 10:28 முற்பகல் |
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூதப்பாண்டி முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட துவரங்காடு , பரபரப்பான பொதுச்சாலை அருகே திறந்தவெளியில் குடிமகன்கள் அமர்ந்து மதுவருந்துவதும் ,
தடைசெய்யப்பட்ட ஒருமுறை உபயோகிக்கும் நெகிழி டம்ளரை சில சமூக விரோதிகள் குடித்துவிட்டு எறிந்து செல்லும் பிளாஸ்டிக் டம்ளர்கள் மலைபோல் குவிந்து கிடப்பதும்,மழை நீரில் அருகிலுள்ள தாமரை நன்னீர் தடாகத்தில் சென்று சேருவதையும் வேதனையுடன் பொதுமக்கள் கடந்து செல்கின்றனர்.
இது குறித்து நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை பாதுகாக்கப்படவேண்டும் என்றும் அப்பகுதிகளில் காவலர்கள் சென்று ஆய்வு நடத்திட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையோடு கோரிக்கை வைத்துள்ளார்கள்.
கருத்துக்கள்