யூத் கிளப் ஆண்டு விழாவில் உலக சாதனையாளருக்கு பாராட்டு
பிலாவிளை ப்ரோ பாய்ஸ் யூத் கிளப் ஆண்டு விழாவில் உலக சாதனையாளருக்கு பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள அம்பலக்கடை பிலாவிளை ப்ரோ பாய்ஸ் யூத் கிளப்பின் ஐந்தாவது ஆண்டு விழாவில் முதல் நிகழ்வாக காலை தேசியக்கொடி ஏற்றுதல் நடைபெற்றது.தொடர்ந்து மினி மாறத்தான் மற்றும் ஓட்டப்போட்டிகள் ஆகியவை நடைபெற்றன.
இரண்டாவது நிகழ்வாக மாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு தலைவர் அனுக்கிரக தலைமை தாங்கினார்.பிரவீன் வரவேற்பு உரையாற்றினார்.அக்ஷயா செயல்பாட்டு அறிக்கை வாசித்தார்.கிறிஸ்டோபர், நித்தியா ஆனந்த், ராஜேந்திரன், வசந்தகுமாரி, ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினர்களாக உலக சாதனையாளர் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ் கலந்துகொண்டு ஊக்க உரையாற்றி பாடல் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். ஆசாரிபள்ளம் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரியும் கலை ஆர்வலர் பா.ஜோணி அமிர்த ஜோஸ் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து டாப் டேன்ஸ் கிரியேட்டர்ஸ் வழங்கிய மாபெரும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.இந் நிகழ்வில் மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிறப்பு நிகழ்வாக சிறுவயது அனைத்து உலக சாதனைகளையும் பாராட்டி நித்திரவிளை ஜோ.ஸ்.தீரஜ் ற்கு கேடயம் மற்றும் மெடல் வழங்கி பாராட்டினர்.
கருத்துக்கள்