advertisement

TNPSC குரூப் 4 முடிவுகள் 2025 வெளியானது

அக். 22, 2025 10:15 முற்பகல் |

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்  வெளியானது. தேர்வர்கள் முடிவுகளை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் 727 கூடுதலாக சேர்த்து 4,662 காலிப்பணியிடங்களுக்கு தற்போது நிரப்பப்படுகிறது. இதற்கான தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற முடிவுகள்  அக்டோபர் 22 வெளியானது. முடிவுகளை தேர்வர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாகவே அறிந்துகொள்ளலாம். 

இந்தாண்டு குரூப் 4 தேர்வை 11.48 லட்சம் பேர் எழுதியுள்ளனர். ஒரு இடத்திற்கு தோராயமாக 250 பேர் என்ற விதம் போட்டி நிலவுகிறது. தேர்வின் தமிழ் பகுதி மிகவும் கடினமாக இருந்ததாகவும், தேர்வை ரத்து செய்யக் கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு நடைபெற்று 3 மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. வனக்காப்பாலர், வனக்காவலர் பதவிகள் இல்லாமல் 2022-2024 வரை 3560 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதல் 896 காலிப்பணியிடங்கள் சேர்ந்து 4456 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement