கழுகுமலையில் கனமழை
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் கழுகுமலைப் பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் நிலவி வந்த அனல் காற்று தணிந்து, குளிர்ந்த சூழல் உருவானதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கயத்தாறு பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் கண்மாய், குளங்கள் வற்றி, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. நேற்று காலையிலும் வெயில் வாட்டிய நிலையில், மாலை 4.30 மணியளவில் திடீரெனச் சூறாவளி காற்றுடன் பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் கழுகு மலை திருமாளிகை தெரு, வேத கோவில் தெரு, நாராயணசாமி கோவில் தெரு, ஆறுமுகம் நகர், கோவில்பட்டி மெயின் ரோடு உள்ளிட்ட அனைத்துத் தெருக்களிலும் தண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி, தாழ்வான பகுதிகளில் தேங்கியது. இரவு வரை நீடித்த லேசான சாரல் மழையால் இப்பகுதியில் வெப்பம் முழுமையாகத் தணிந்து குளிர்ச்சி நிலவியது.





கருத்துக்கள்