advertisement

தூத்துக்குடி : இலங்கைக்குக் கடத்த முயன்ற ஷாம்பு பறிமுதல்

ஜூன் 19, 2026 5:08 முற்பகல் |

 


தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காக ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 ஷாம்புகளைக் க்யூ பிரிவு போலீசார்  பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடிஇனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், ஆகியோர் அடங்கிய போலீசார் குழுவினர் நேற்று இரவு முதல் இனிகோ நகர் பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று (1ம் தேதி) அதிகாலை  இனிகோ நகர் கடற்கரையின் தெற்குப் புறப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஆட்டோவை போலீசார் வளைத்துப் பிடித்துச் சோதனையிட்டனர். அப்போது அந்த ஆட்டோவில் சுமார் 51 அட்டைப் பெட்டிகளில், 8 மூட்டைகளாகப் பேக் செய்யப்பட்டிருந்த மொத்தம் 48,960 சன்சில்க் மற்றும் கிளினிக் பிளஸ் வாசனை ஷாம்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது விசாரணையில் உறுதியானது.

 தொடர்ந்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாசனை ஷாம்பு மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இக்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநரான தூத்துக்குடி தாளமுத்து நகர் அடுத்த வெள்ளைப்பட்டி, அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் மரிய நிசாந்தன் (32) என்பவரை கைது செய்தனர். விசாரணை நடைபெற்று வருகிறது.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement