அம்மா உணவக ஊழியர்கள் இருவர் பணிநீக்கம் ?
கோவில்பட்டி அம்மா உணவகங்களில் தயாரிக்கப்படும் இட்லிகள், தனியார் ஓட்டல்களுக்கு மொத்தமாகக் கடத்தப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இரண்டு ஊழீயர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பார்க் ரோட்டில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகேயும், அண்ணா பேருந்து நிலைய வளாகத்திலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒரு ரூபாய்க்கு வாங்கப்படும் இட்லிகள், தனியார் ஓட்டல்களுக்கு மொத்தமாக விற்கப்படுவதாகவும், அவை ஓட்டல்களில் ரூ.10 முதல் ரூ.15 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதற்கிடையே, நெல்லை மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் நேற்று காலையில் கோவில்பட்டி அம்மா உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். டோக்கன் வழங்கும் கவுண்ட்டர் மற்றும் உணவு வழங்கும் இடங்களைப் பார்வையிட்ட அவர், ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் மேற்படி புகார் காரணமாக இருஊழீயர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.





கருத்துக்கள்