advertisement

“வாயை திறங்க CM” வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக

ஜூன் 18, 2026 6:00 முற்பகல் |

 

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை இன்று கூடு​ம் நிலையில், சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுகவினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

தமிழகத்​தின் 17–வது சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலை​மை​யில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்​கு​கிறது. முன்​ன​தாக, ஆளுநர் அர்​லேகரை சமீபத்​தில் சந்​தித்த பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர், பேரவை​யில் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்​தார்.காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.அதேபோல்,எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி அரசுக்கு என்ன மாதிரியான சவாலை விடுக்கவிருக்கிறார். முதல்வர் விஜய் எப்படி அவற்றை சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் பலமாக உருவாகியுள்ளது.

இந்தச் சூழலில், சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுகவினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement