பரமக்குடி : ஜுலை 8 ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
பரமக்குடி வட்டம் பொட்டகவயல் உள்ளடக்கிய வருவாய் கிராமங்களில் ஜுலை 08-ந் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளதென பரமக்குடி வட்டாட்சியர் இராமமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார் .
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் வரும் 08.07.2026. (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் பரமக்குடி வட்டம், பொட்டகவயல், அரசனூர், சிறுவயல், பி. கொடிக்குளம் ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
அதற்கான முன் மனுக்கள் வருகிற 20.06.2026. (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் பொட்டகவயல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ராமநாதபுரம் சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியரால் பெறப்பட உள்ளது.பொதுமக்கள் , தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்கள் அளித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என பரமக்குடி வட்டாட்சியர் இராமமூர்த்தி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்