advertisement

கீழக்கரையில் ஜமாபந்தி

ஜூன் 18, 2026 4:49 முற்பகல் |

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஜமாபந்தி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில்,  கீழக்கரை பிர்க்கா உட்பட்ட பனையடியேந்தல், வேளானூர், மாணிக்கனேரி, புல்லந்தை, மாயாகுளம், கீழக்கரை, காஞ்சிரங்குடி, குளபதம், இதம்பாடல், ஏர்வாடி ஆகிய கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.  மேற்கண்ட கிராமங்களின் கிராம கணக்குகளான அடங்கல், பட்டாமாறுதல்கள், உட்பிரிவு மாறுதல்கள், முதியோர் ஓய்வூதியர்கள் பதிவேடு உள்ளிட்ட கிராமக் கணக்குகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல் மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், மனுக்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் வருவாய்த் துறையின் மூலம் 20 பயனாளிகளுக்கு கணினி பட்டாக்களை வழங்கினார்.

நிகழ்வின் போது த ராமநாதபுரம் நில அளவை உதவி இயக்குநர் அண்ணாமலை பரமசிவம் , கீழக்கரை வட்டாட்சியர் இராமசுப்பிரமணியன் , வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கதிரவன் , மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement