advertisement

திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை 4.21 கோடி

செப். 02, 2026 4:36 முற்பகல் |


 

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 4.21 கோடி ரொக்கம் மற்றும் 1 கிலோக்கும் அதிகமான தங்கம் வசூலாகியுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் உண்டியல்கள் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. இப்பணிக்குத் தக்கார் ரா. அருள்முருகன் தலைமை வகித்தார். இணை ஆணையர் ஆ. அருணாசலம் முன்னிலை வகித்தார்.

உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 4 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 205-ம், தங்கம் 1022 கிராம், வெள்ளி 22,292 கிராம், பித்தளை 59,040 கிராம், செம்பு 4,362 கிராம், தகரம் 11,118 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1447-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்த

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement