தூத்துக்குடியில் VIT கல்வி வளாகம் அமைக்க கோரிக்கை
தூத்துக்குடியில் VIT கல்வி வளாகம் அமைக்க தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தூத்துக்குடிக்கு வருகை புரிந்த வேலூர் தொழில்நுட்ப கழகத்தின்; நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன் அவர்களிடம் தென் தமிழகத்தின் கல்வி மற்றும் தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தூத்துக்குடியில் VIT கல்வி வளாகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நிலம், கல்வி மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், தென் தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைக்கு தேவையான அறிவ மற்றும் திறமையான மனிதவளத்தை உருவாக்கும் வகையில் தூத்துக்குடியில் VIT அமைவது ஒரு கல்வி நிறுவனத்தின் விரிவாக்கமாக மட்டுமல்லாமல் தென் தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான முதலீடாகவும் அமையும் என தெரிவித்து தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் திரு.S.சுரேஷ்குமார், பொருளாளர் திரு.ஜோசப் காஸ்கரினோ மற்றும் முன்னாள் தலைவர்கள் திரு.GP.ஜோ பிரகாஷ் மற்றும் திரு.T.R.தமிழரசு ஆகியோர் இணைந்து கோரிக்கை மனு அளித்தார்கள்.





கருத்துக்கள்