செந்தியம்பலம் பிரதான ரோடு வேலை ஆரம்பம் - தூத்துக்குடி ஆட்சியருக்கு சேர்வைக்காரன்மடம் உபதலைவர் நன்றி
திங்கள் தின கோரிக்கை ஏற்கப்பட்டு செந்தியம்பலம் பிரதான ரோடு வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு சேர்வைக்காரன்மடம் உபதலைவர் நன்றி கூறியுள்ளார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி செந்தியம்பலம் கிராமம் உள்ளது.இது நெசவாளர் பெருமக்கள் உள்ள பகுதியாகும்.இங்கு சுமார் 1500 பேர் வாழ்ந்து வரும் பகுதியாகும்.இந்த கிராமத்தில் சாயர்புரம் மின்கடை பஜார் பகுதியிலிருந்து ரேஷன் கடை ,ஆரம்ப பள்ளி வழியாக செல்லும் பிரதான சாலை சுமார் 15வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட சாலையாகும்.சேர்வைக்காரன்மடம் ஊராட்சியைச்சார்ந்த மற்ற கிராமங்களில் ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த கிராமத்தில் மேற்படி கடந்த 4வருடங்களாக எந்த கிராம சாலையும் இதுவரை அமைக்கப்படவில்லை.
2022/2023 மகாத்மா காந்தி தேசிய ஊரக ஆண்டில் இந்த கிராமத்தில் அரசு ஒப்புதல் பெறப்பட்ட சாலையும் இன்னும் அமைக்கப்படவில்லை.ஆனால் இந்த சாலையுடன் ஒரே நேரத்தில் அனுமதி பெற்ற தங்கம்மாள் புரம் சாலை அமைக்கப்பட்டு விட்டது என்பது கவனத்திற்குரியது.மேற்படி செந்தியம்பலம் கிராமத்தில் மேற்குரிய பிரதான சாலை டெண்டர் விடப்பட்டு உள்ளது.ஆனால் இது வரை இந்த சாலை வேலை நடைபெறவில்லை.இதன் உடன் டெண்டர் விடப்பட்ட சக்கம்மாள்புரம் இடுகாடு நடுவக்குறிச்சி JGS கடை வரை உள்ள சாலை வேலை நடைபெறுகிறது.ஆனால் மக்கள் பலமுறை கோரிக்கை அளித்த ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தும் இந்த சாலை வேலை நடைபெறவில்லை.
மாவட்ட ஆட்சியர் டெண்டர் விடப்பட்டு கிடப்பில் போடப்பட்ட இந்த சாலையை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.NRGS தங்கம்மாள்புரம் ஒடக்கரை சாலையை போல் அல்லாமல் தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை உபதலைவர் மாவட்ட ஆட்சியரிடம் 27/11/2023 கொடுத்தார்.மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நடவடிக்கையின் பேரில் இன்று சாலை நடைபெறுகிறது.ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா நன்றி தெரிவித்தார
கருத்துக்கள்