advertisement

அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத் குடும்பம் உயிரிழப்பு

ஜூலை 09, 2025 3:31 முற்பகல் |

அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத் குடும்பத்தினர் 4 பேர் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட ஒரே குடும்பத்தினர் 4 பேர் விடுமுறை தினத்தை கழிக்க அமெரிக்கா சென்று உள்ளனர். அட்லாண்டாவில் உள்ள தங்கள் உறவினர்களைப் பார்த்துவிட்டு 4 பேர் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்களது கார் விபத்தில் சிக்கியது. நான்கு பேரும் சென்ற கார் லாரி மீது மோதி தீ பற்றியதில் உடல் கருகி உயிரிழந்தனர்.தேஜஸ்வினி, ஸ்ரீ வெங்கட் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என மொத்தம் நான்கு பேர் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக ஹைதராபாத்திற்கு கொண்டு வரப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement