advertisement

சிவகாசி -  லிப்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு

மே 30, 2025 6:58 முற்பகல் |


 
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை தெருவைச் சேர்ந்தவர்கள் பாதுஷா என்பவரது மகன் முகமது ஆசிப் (12).  கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் முகமது ஆசிப் தனது சித்தியுடன், அவர் பணிபுரியும் தனியார் அச்சகத்துக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அச்சகத்தில் பொருட்களை ஏற்றும் இயந்திரத்தில் (லிப்ட்) முகமது ஆசிப் ஏறி விளையாடிய போது, திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில், காயமடைந்த சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.ன்ன?

தகவல் அறிந்த சிவகாசி நகர் போலீஸார் சம்பவ இடத்pற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement