"கேமரா முன்பு மட்டும் ஏன் உங்கள் ரத்தம் கொதிக்கிறது-பிரதமரை சாடிய ராகுல் காந்தி..!
''கேமராக்களுக்கு முன்னால் மட்டும் ஏன் உங்கள் இரத்தம் கொதிக்கிறது? நீங்கள் இந்தியாவின் கவுரவத்தை சமரசம் செய்துவிட்டீர்கள்''என்று 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த பிரதமர் மோடியின் உரை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- 'மோடி ஜி, வெற்றுப் பேச்சுகளை நிறுத்துங்கள். எனக்கு பதில் சொல்லுங்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் ஏன் நம்பினீர்கள்? என்றும், டிரம்புக்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்?என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கேமராக்களுக்கு முன்னால் மட்டும் ஏன் உங்கள் இரத்தம் கொதிக்கிறது? நீங்கள் இந்தியாவின் கவுரவத்தை சமரசம் செய்துவிட்டீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துக்கள்