கோவில்பட்டியில் இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பை ஹாக்கி போட்டி
கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பதின்நான்காவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் ஜூன் 01ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
மே 23ம் தேதி காலை 07.00 மணி அளவில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், சென்னை இன்கம் டேக்ஸ் ஹாக்கி அணியும் மோதின. இதில் 2:0 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றிப் பெற்றது.42-வது நிமிடத்தில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் விஷால் அன்டில் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
60-வது நிமிடத்தில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் மந்தீப் மோர் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். சுரேஷ் குமார் மற்றும் ராஜீவ் ராத்தன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.சிறந்த ஆட்டக்காரர் விருது நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் விஷால் அன்டில்-க்கு வழங்கப்பட்டது.
மாலை 06.45 மணியளவில் நடைபெறும் 7வது லீக் போட்டியில் சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதுகின்றன. இரவு 08.15 மணியளவில் நடைபெறும் 8வது லீக் போட்டியில் நியூ டெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் மும்பை சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதுகின்றன.
கருத்துக்கள்