பட்டினமருதூரில் ட்ரோன் மூலம் தொல்லியல் அகழ்வாய்வு அளவீடு பணிகள் தொடக்கம்
மே 23, 2025 12:02 பிற்பகல் |
தூத்துக்குடி அருகே பட்டினமருதூரில் தமிழக தொல்லியல் துறை அகழ்வாய்வு தொடர்பாக ட்ரோன் மூலமாக அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியது.
தமிழக பட்ஜெட்டில் புதிதாக கண்டறியப்பட்ட பட்டினமருதூர் உள்ளிட்ட எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள முதல் கட்டமாக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டினமருதூரில் முதல் கட்டமாக தமிழக தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி குழுவினர் ட்ரோன் மூலம் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளக்கூடிய இடங்களை அளவீடு செய்தனர். ஜி பி எஸ் லொகேஷன் உடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளையும் பதிவு செய்தனர்
கருத்துக்கள்