advertisement

கல்குவாரியில் பாறை சரிந்து 6 பேர் பலியான வழக்கில் 2 பேர் கைது

மே 23, 2025 8:34 முற்பகல் |

கல்குவாரியில் பாறை சரிந்து 6 பேர் பலியான வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரியில் கடந்த 20-ந் தேதி, ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகினர்.பொக்லைன் டிரைவர்  ஹர்ஷித்தின் உடலை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டது குறிப்பிடத்தக்கது.

படுகாயத்துடன், மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மைக்கேலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து கல்குவாரியில் பாறைகள் விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது. 

இந்த நிலையில், கல்குவாரியில் பாறை சரிந்து 6 பேர் பலியான வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குவாரியின் உரிமையாளர் மேகவர்ணனின் தம்பி கமலதாசன், மேற்பார்வையாளர் கலையரசன் ஆகியோரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement