advertisement

“தண்ணீரை நிறுத்தினால் உங்கள் மூச்சை நிறுத்துவோம்” இந்தியாவுக்கு பாக்., எச்சரிக்கை

மே 23, 2025 9:59 முற்பகல் |

 

இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம் என இந்தியா தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார். எங்கள் தண்ணீரை நீங்கள் தடுத்தால், உங்கள் மூச்சை அடைத்துவிடுவோம் என அவர் வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்தது பேசியிருக்கிறார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் வழங்குவதை இந்திய அரசு நிறுத்திய விஷயம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். இதனால் பாகிஸ்தானில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு  பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி இந்தியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” நீங்கள் எங்களுடைய தண்ணீரை நிறுத்தினால் நாங்கள் உங்களுடைய மூச்சை நிறுத்திவிடுவோம். இந்தியாவின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்திய முடிவு மிகவும் மோசமானது. இது பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான தாக்குதல் ஆகும்.

இந்தியா தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தால், பாகிஸ்தான் தனது மக்களின் உரிமைகளை பாதுகாக்க தயங்காது. எங்கள் மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், உரிய பதிலடி கொடுக்கப்படும்” எனவும் அகமது ஷெரீப் சவுத்ரி பேசினார். இவர் இப்படி பேசிய நிலையில்,  முன்னதாக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததால் கோபமடைந்த பாகிஸ்தான், ஹபீஸ் சயீத்தின் பழைய வீடியோக்களும்  வைரலாகி வருகிறது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement