ஈடி ரெய்டால் டெல்லிக்கு போகிறாரா முதல்வர் ஸ்டாலின்? சீமான் பரபரப்பு பேட்டி!
மே 23, 2025 9:25 முற்பகல் |
திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு, அவருடைய சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைதலையிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த சீமான், "நாட்டில் அனைத்து முடிவுகளையும் நீதிமன்றம்தான் எடுக்கும் போல் நடந்தால், சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகியவை ஏன் தேவை?" என கேள்வி எழுப்பினார்.அமலாக்கத்துறை சோதனையால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகத்தான், பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு சென்றுள்ளார்," என்றும் குறிப்பிட்டார்.
கருத்துக்கள்