advertisement

நான் தவறு செய்திருந்தால் என்னை எரித்துவிடு கடவுளே: கெனிஷா உருக்கம்

மே 23, 2025 9:45 முற்பகல் |


 

கடவுளே நான் தவறு செய்திருக்கிறேன் என நினைத்தால் என்னை எரித்துவிடு என உருக்கமாக தெரிவித்திருக்கிறார் ரவி மோகனின் தெரபிஸ்டான கெனிஷா பிரான்சிஸ். அதை பார்த்த ஆதரவாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

ரவி மோகன், ஆர்த்தி விவாகரத்து விவகாரம் தொடர்பாக சமூக வலைதளவாசிகள் தன்னை விளாசுவதை பார்த்து இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டு பதில் அளித்து வருகிறார் பாடகியும், தெரபிஸ்டுமான கெனிஷா பிரான்சிஸ். தன்னை பற்றி ஒருவர் சொன்ன பொய்யை நம்பி அனைவரும் விளாசுவது சரி அல்ல என்கிறார் அவர்.மேலும் தன்னை விளாசுபவர்களை எல்லாம் கடவுளிடம் விட்டுவிடுவதாகவும், அவர் பார்த்துக் கொள்வார் என்றும் கூறியிருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டா ஸ்டோரியில் சிவபெருமானின் புகைப்படத்தை வெளியிட்டு கெனிஷா பிரான்சிஸ் கூறியிருப்பதாவது,

நீங்கள் தான் கடவுளே எனக்காக இந்த பாதையை தேர்வு செய்தீர்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்கிற உண்மை தெரிந்தவர்கள் மற்றும் அனைவரையும் உங்கள் பொறுப்பில் விடுகிறேன். உண்மையை வெளிக்கொண்டு வாங்க கடவுளே. எந்த வகையிலாவது நான் தவறு செய்திருந்தால் என்னை எரித்துவிடுங்கள் அல்லது உங்களிடம் அழைத்துக் கொள்ளுங்கள். நான் சரண் அடைகிறேன். ஓம் நமச்சிவாய என தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement