தமிழ்நாடு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குகிறது
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருமதமாக கோடை வெலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.இந்தநிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துவருகிறது.மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருத்தது.இந்தநிலையில் தெற்கு கொங்கன் - கோவா கடலோரப் பகுதிக்கு அப்பால் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை மாலை வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரளா அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்