ஈ.டி.க்கும் மோடிக்கும் பயப்பட மாட்டோம்..உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
தவறு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டத்தில் ஒன்றிய அரசு மாநில அரசுகளின் கோரிக்கைகளை விவாதிக்கவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாகவும் இந்த கூட்டம் அமைந்திருக்கிறது.மாநில வளர்ச்சி, திட்ட செயல்பாடுகள், மாநிலத்திற்கான நிதி ஆதாரங்கள் போன்றவைகளை விவாதிக்கும் வாய்ப்பாக இந்த கூட்டம் பயன்பட்டு வருகிறது. பின்னடைவாக இருக்கின்ற பல மாநிலங்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களை உயர்த்தி கேட்கும் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு இந்த கூட்டம் பயன்பட்டு வருகிறது.
இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. விமர்சனங்களை முன்வைத்த நிலையில், 'யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு கிடையாது' என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது;- நிதியை கேட்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றிருக்கிறார். நாங்கள் ஈ.டி.க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கருத்துக்கள்