பனிரெண்டு,10 ம் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு
மே 24, 2025 11:20 முற்பகல் |
தூத்துக்குடியில் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் அமைச்சர் கீதாஜீவன் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் 2025 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 49 மாணவ - மாணவியருக்கும், பன்னிரண்டாம் வகுப்பில் 590 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 6 மாணவ - மாணவியருக்கும், பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் ஊக்கத்தொகை வழங்கி, அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
கருத்துக்கள்