இந்தியாவை அணு ஆயுதத்தை காட்டி எந்த நாடும் அச்சுறுத்த முடியாது! - கனிமொழி
கடந்த ஏப்ரல் 22ம் தேதி, காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ''ஆப்ரேஷன் சிந்தூர்'' நடவடிக்கையும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலும் குறித்து சர்வதேச நாடுகளுக்கு தெளிவாக விளக்குவதற்காக, அனைத்துக்கட்சி எம்.பிக்களை உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன.
இக்கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமையில் ஒரு எம்.பிக்கள் குழுவினர் ரஷ்யா சென்றனர்.மேலும், மாஸ்கோ நகரில் ரஷ்ய கூட்டமைப்பின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரேருடென்கோவை இந்திய எம்.பிக்கள் குழுவினர் சந்தித்து உரையாடினார்.இது தொடர்பாக, கனிமொழி கருணாநிதி எம்.பி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ''அனைத்து வகையான பயங்கரவாதத்தையும், தோற்கடிப்பதற்கான இந்தியாவின் தெளிவான மற்றும் நிபந்தனையற்ற உறுதியையும், அதை ஒழிப்பதற்கான நமது சமரசமற்ற நிலைப்பாட்டையும் தேசிய உறுதியையும் வலியுறுத்தி, சர்வதேச விவகாரங்களுக்கான ரஷ்ய எம்.பிக்கள் குழுவின் தலைவர் லியோனிட் ஸ்லட்ஸ்கி மற்றும் உறுப்பினர்களிடம் இந்தியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு விளக்கி தெரிவித்தது'' என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்