advertisement

நான் என்ன தப்பு பண்ணினேன்..” - அன்புமணி ராமதாஸ் உருக்கம்!

மே 24, 2025 12:03 பிற்பகல் |

 

அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் பாமக கூட்டத்தில், ராமதாஸ் இலட்சியங்களை நிறைவேற்றுவோம் என்றும், வன்னியருக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருந்தால் கட்சி தொடங்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

ராமதாஸ் வழியில் அவரது லட்சியங்களை நிறைவேற்றுவோம் என்றும் கட்சி தொடங்கிய நோக்கத்தை நிறைவேற்றுவோம் எனவும் தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் பாமக கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், “பாமக நிறுவனர் ராமதாஸ் ஊர் ஊராக சென்று எல்லோரும் என்னுடன் வாங்க, உங்களுக்கு விடுதலை வாங்கி தருகிறேன். கல்வியும், இட ஒதுக்கீடு வாங்கி தருகிறேன் என்று சொன்னார். இந்த சமூகம் வாழ வேண்டும் என்பதற்காக உருவாக்கினார். யாரும் எம்எல்ஏ, எம்பி ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை.

நான் பெரியவன், நீ பெரியவன் என்பதில்லை. தட்டிக் கொடுத்து தான் வேலை வாங்கனும். மாநாட்டுக்கு முன்னாடி சத்ரியனா இருக்க கூடாது. சாணக்கியனாக இருக்க வேண்டும் என்று சொன்னேன். நாம் எப்போது வேகமாக இருக்க வேண்டும் என்பதை நான் சொல்கிறேன். அதுவரை அமைதியாக இரு என தெரிவித்தார். அவர் வழியில், அவர் இலட்சியங்களை நிறைவேற்றுவோம். அவர் வழியில் தான் பயணிக்கிறோம். அவர் கட்சி தொடங்கிய நோக்கத்தை நிறைவேற்ற போறோம்.
கடந்த ஒரு மாதமாக இரவில் தூக்கம் வரவில்லை. என் மனதிற்குள் பல கேள்வி. நான் என்ன தப்பு பண்ணேனு. ஏன் நான் மாற்றப்பட்டேன். என் கனவு, என் இலட்சியம் எல்லாமே, அவர் என் நினைச்சா ரோ அதைத்தான் நிறேவேற்றினேன். இனியும் ஒரு மகனாக என்ன நினைக்கிறாரோ அதைத்தான் நிறைவேற்றுவேன். இனிவரும் காலம் நம் காலம். நாம் அனைவரும் ஒற்றுமையாக அனுகுவோம். வெற்றி பெறுவோம். நமது முதல் வெற்றியே வருகிற 2026 வெற்றியாக இருக்கும். திமுகவில் முக்கிய நபர் எனக்கு திருமண நாள் வைத்தார்.ர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement