advertisement

சென்னையில் இருந்து இலங்கை, மாலத்தீவுக்கு விரைவில் சொகுசு கப்பல் சேவை

மே 24, 2025 4:37 பிற்பகல் |

 

சென்னையில் இருந்து விரைவில் வெளியூர்களுக்கு சொகுசு கப்பல் சேவை தொடங்குகிறது. இதையொட்டி, டெர்மினல் விரிவாக்க பணி தொடங்கியது.

பயணிகள் கப்பல் வசதிக்காக 7 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய சுற்றுலா அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்து சென்னை துறைமுகத்தை விரிவுபடுத்தியது. அந்த டெர்மினல் கடந்த 2018-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

சென்னை துறைமுகத்தின் வடக்கு பகுதியை பயணிகள் சென்றுவர பயன்படுத்தி வருகின்றனர். அங்கு அதிக கூட்டம் கூடுவதால் தெற்கு பகுதியில் டெர்மினலை விரிவாக்கும் பணி தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் பயணிகள் எளிதில் சென்னை துறைமுகத்தை அணுக முடியும்.தற்போது சென்னை துறைமுகத்தில் 1,000 பயணிகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக யன்படுத்துகின்றனர். இரண்டாவது டெர்மினல் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், கூடுதலாக 1,800 பேர் இதனை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் பயணிகளின் நலன் கருதி கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் நகரும் படிக்கட்டு வசதியும் (எஸ்கலேட்டர்) ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல பயணிகள் தங்களது பைகளை வைப்பதற்கான பகுதியும் மேம்படுத்தப்பட உள்ளது.

நாட்டிலேயே சிறந்த துறைமுகமாக சென்னையை மாற்றுவது இப்போதைய தேவை. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான கப்பல்கள் சென்னையை நோக்கி வரும். சென்னையில் ஏராளமான வளம் நிறைந்து இருக்கிறது.சென்னையில் இருந்து புதுச்சேரி, இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் போர்ட் பிளேயர் ஆகிய பகுதிகளுக்கு வருங்காலத்தில் கப்பல் சேவையை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுற்றுலா வருவாய் அதிகரிக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் விமான மற்றும் சுற்றுலா கமிட்டி தலைவர் சுபாஷ் கோயல் தெரிவித்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement