ஜப்பானில் 50 இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்
ஜப்பானில் 54 வயதான கார் டிரைவர் ஒருவர் கைதான நிலையில் அவர் போதைபொருட்கள் கொடுத்து 50 இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு இவரது காரில் பயணித்த டோக்கியோவை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி அந்த பெண்ணிற்கு கார் டிரைவர் தூக்க மாத்திரை கொடுத்து பின்னர் தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.அப்போது அவர் உல்லசமாக இருந்ததை செல்போனில் வீடியோ எடுத்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் அவர் இதேபோல தொடர்ந்து பல பெண்களுக்கு இதேபோன்று இரட்டை அர்த்தத்தில் பேசி, போதை பொருட்கள் கொடுத்து வீடு மற்றும் காரில் வைத்து அவர்கள் கற்பை சூறையாடியது தெரிய வந்துள்ளது. இதையும் அவர் வீடியோவாக எடுத்துள்ளார்.
மொத்தம் 50 இளம்பெண்கள் கார் டிரைவர் வலையில் சிக்கி தங்கள் கற்பை இழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் போலீசார் கார் டிரைவரின் செல்போன் மற்றும் லேப்டாப்பை கைப்பற்றி ஆய்வு செய்ததில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்