பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்
ஜூலை 31, 2025 3:32 முற்பகல் |
சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூடத்தையே உருவாகி வைத்திருப்பவர் வேடன்.
இவர் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில், 'குத்தந்திரம்' பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இந்த நிலையில், கொச்சி திருக்காக்கரா காவல் நிலையத்தில் இளம்பெண் மருத்துவர் ஒருவர் ராப் இசை பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். அதாவது, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் கொச்சி திருக்காக்கரா போலீசார் வேடன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கருத்துக்கள்