advertisement

கர்நாடகாவில் அதிசயம் - உலகிலேயே புதிய ரத்தம் கொண்ட முதல் பெண்

ஜூலை 31, 2025 6:56 முற்பகல் |

 

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது ரத்தம் 'ஓ ஆர்.எச். பாசிட்டிவ்' வகையைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், மற்றவர்களை விட வழக்கத்திற்கு மாறாக அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வினைபுரியும் நிலையில் இருந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அந்த பெண்ணின் ரத்த மாதிரியை பெங்களூரு டி.டி.கே. ரத்த மையத்தில் அமைந்திருக்கும் அதிநவீன இம்முனோஹெமடாலஜி ரெபரென்ஸ் ரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பினர். 

அதில் அந்த பெண்ணின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவரது ரத்தம் பான்ரியாக்டிவ் ஆவது, அதாவது அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வினைபுரியும் நிலையில் இருந்தது.

பின்னர் அவர் அந்த பெண்ணின் ரத்த மாதிரியை இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை கண்டறியும் மையத்துக்கு அனுப்பினார். அங்கு 10 மாதங்களாக நடந்த சோதனையில் அந்த பெண்ணுக்கு இருப்பது உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் எnbathu கண்டுபிடிக்கப்பட்டது. 

அந்த ரத்த வகைக்கு சி.ஆர்.ஐ.பி. என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகிலேயே இந்த வகை ரத்தம் உள்ள முதல் நபர் இந்தப் பெண் தான் என்று அவர்களும் அறிவித்தனர்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement