வீடியோ வெளியிட்ட டாஸ்மாக் ஊழியர் - அண்ணாமலை கடும் கண்டனம்
திருச்சியை சேர்ந்த டாஸ்மாக் பார் ஓனர் ஒருவர், தனது இறப்பிற்கு டாஸ்மாக் அதிகாரிகளும், மதுவிலக்கு துறை போலீசாரும் தான் காரணம் என்று வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காணொளியை வெளியிட்டு பாஜக அண்ணாமலை விடுத்துள்ள கண்டனச் செய்தியில், "தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்தின் ஒரே நோக்கம், சாதாரண மக்கள் மீது மது புகுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கச் செய்வது, அதன்மூலம் திமுக ஆதாயம் பெறுவதே ஆகும்.
அனுமதியற்ற பார்களில் நடைபெறும் மது விற்பனை, ஒவ்வொரு கடையிலிருந்தும் கணக்கில் காட்டாத லட்சக்கணக்கான வருமானம், இவை அனைத்தும் ஒவ்வொரு மாதமும் திமுக அமைச்சர்களின் பைகளை நிரப்புகின்றன.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இன்னும் எத்தனை உயிர்களை உங்கள் அரசு அழிக்க வேண்டும்? ஏழைகளை சூறையாடுவதை நிறுத்தி, ஒரு மாநில முதல்வராக நீங்கள் நடந்துகொள்வதற்குள்?" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்