தங்கம்மாள்புரம் சி.எஸ்.ஐ பரி.பேதுருவின் 88 வது ஆலய அசன விழா
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் உள்ள தங்கம்மாள்புரம் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சி.எஸ்.ஐ பரி.பேதுருவின் 88 வது ஆலய அசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கு பெற்றனர்.
கடந்த 18 ம் தேதி ஆசிர்வாத குடும்ப கூடுகை நடைபற்றது.சுவிசேஷகர் ஜேம்ஸ் பிலிப் ,மாரநாதா ஊழியங்கள் சென்னை பங்கு பெற்று தேவ செய்தி அளித்தார்.பின் 19 ம் தேதி ஆயத்த ஆராதனையுடன் தொடங்கியது.20 ம் தேதி காலை 5 மணிக்கு பண்டிகை ஆராதனை நடைபெற்றது .ஆயர் அகஸ்டின் கோயில் ராஜ்,டாக்டர் ஜி.யூ.போப் சபை மன்ற தலைவர் அவர்கள் தேவ செய்தி அளித்தார்கள்.மாலை 5 மணிக்கு அசனவிருந்து நடைபெற்றது.இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள சுமார் 5000 நபர்கள் கலந்து கொண்டார்கள்.அசன விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த அசனவிழாவை சபைத் தலைவர் SDR .பொன்சீலன் மற்றும் ஆலய பொருளாளர் SDR.விஜயசீலன், மற்றும் அசன கமிட்டி தலைவர் சாமுவேல் மற்றும் சபையார் தர்மராஜ்,பாலசிங்,பீற்றர்,ஜெபராஜ் ,துரைசிங்,மற்றும் ஜெபஸ்டின்,பொன்கிருபாகரன்,பால சேகர், பால்ராஜ்,மணி பால்ராஜ் ,ராஜா,சுரேஷ்,பொன்சேகர் ,ஜெசிந்,ஜெபதுரை,தானியேல்,ரவி,ஜெயா மற்றும் சபையார் உற்சாகமாக நடத்தினார்கள் .
கருத்துக்கள்