பாஜகவின் மற்றொரு வடிவம் தவெக: வைஷ்ணவி பேட்டி..!
மே 23, 2025 2:53 முற்பகல் |
பாஜகவின் மற்றொரு வடிவம் தமிழக வெற்றிக்கழகம் என தவெக-வில் இருந்து விலகிய வைஷ்ணவி தெரிவித்துள்ளார். கோவையை சேர்ந்த சமூகவலைதள பிரபலமான (இன்ஸ்டா) வைஷ்ணவி தற்போது செந்தில் பாலாஜி தலைமையில் திமுக-வில் இணைந்துள்ளார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
'தமிழக வெற்றி கழகத்தில் ஒரு வருடமாக பயணித்தேன். இளைஞர்களை ஊக்குவிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், ஏமாற்றமே கிடைத்தது. தவெகவின் மற்றுமொரு திரை பாஜக என்பதால் திமுகவில் இணைந்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இன்று முதல் என் மக்கள் பணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழியில் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்